Thursday, June 19, 2008

காத்திருப்பேன்

அஷ்த்தமித்த சூரியன் மீண்டும் உதிக்க
நேரம் காத்திரு என்றது - காத்திருந்தேன்.
பொறுமையுடன் கிழக்கு திசை நோக்கி.

தேய்ந்த வெண்ணிலா தெளிவுடன் தென்பட
நாட்கள் காத்திரு என்றது - காத்திருந்தேன்.
நட்சத்திரங்களுடன் கருகிய வானம் நோக்கி.

தழுவிச்சென்ற ஆடித் தென்றல் தொட
மாதங்கள் காத்திரு என்றது - காத்திருந்தேன்.
மெல்லிசை ஊதிய புல்வெளி நோக்கி.

நேரம், நாள், மாதம் காத்திருந்தநான்
வருடங்கள் காத்திருந்தேன். யுகங்கள் காத்திருப்பேன்.
உன் இமை என்மேல் விழுந்திட.

Tuesday, February 06, 2007

கனி-மொழி - 1

அடுத்தடுத்த கம்ப்யூட்டர்ல
உட்காருந்தாலும் ஈ-மெயில்
அனுப்பினா செர்வருக்குப்
போய்தான் வரும்

Friday, September 22, 2006

ஜில்லென்று ஒரு காதல்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்துள்ள "ஜில்லென்று ஒரு காதல்" படப் பாடலை முனுமுனுத்துக் கொண்டிருந்த போது தோன்றிய வரிகள் இவை....

காதல் மேகமாய்
விண்ணிலே பறப்போம்
மழை நீர் துளிகளாய்
மண்ணில் வந்து சேர்வோம்

ஜில்லென்று ஒரு காதல்....
ஒ.... ஜில்லென்று ஒரு காதல்!

இது கவிதை அல்ல!


இடது விழியை மறைத்துக் கொண்டேன்
வலது விழியில் தெரிந்தாய்
வலது விழியை மறைத்துக் கொண்டேன்
இடது விழியில் தெரிந்தாய்
இரு விழிகளால் பார்த்தேன்
அட....... என் கண் எதிரேதான் நிற்கின்றாய்

Thursday, September 21, 2006

அனைவருக்கும் வணக்கம்

இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் இன்ஜெய்யின் நன்றி மற்றும் அன்பார்ந்த வணக்கங்கள். எனக்கு வெகு நாட்களாக தமிழில் ப்ளாகு எழுத வேன்டும் என்று ஆசை. அதன் விளைவுதான் இந்த இன்ஜெய் உலகம். இவ்வுலகில் நிகழும் நினைவுகளையும் எனது கற்பனை உலகில் காணும் கனவுகளையும் இவ்வேட்டில் காண முடியும். இப்புதுமுயற்சி என்னை ஒரு எழுத்தாளனாக மாற்றாவிட்டாலும் ஒரு தமிழன் என்ற உணர்வைக் கொடுக்கும் என்று கலத்தில் இறங்குகின்றேன். என்ன நடக்கும் என்பதை காலம் சொல்லட்டும். பார்க்க்லாம்.

கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

--திருக்குறள், திருவள்ளுவர்